திங்கள், ஏப்ரல் 02, 2012

மகாராஷ்டிர சட்டசபையில் இருந்து 13 சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் !

14 Maharashtra MLAs suspended for performing aarti in Houseமகாராஷ்டிர மாநிலம் ராய்காட்டில் உள்ள விநாயகர் கோயிலில் 1.5 கிலோ எடையுள்ள தங்க சிலை கடந்த வாரம் கொள்ளை போனது. கொள்ளையர்களை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த பிரச்னையை சிவசேனா, பாஜ எம்எல்ஏக்கள், நேற்று சட்டசபையில் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒரு அடி உயர வெள்ளி விநாயகர் சிலையை அவைக்குள் வைத்து ஆரத்தி எடுத்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மக்கள் அணியும் தொப்பியை அணிந்து கணபதி பப்பா
மோரியா என்று சத்தமாக பாடினர்.
கடும் அமளியால் ஒரு மணி நேரத்துக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு சபை கூடியதும், சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாட்டீல், சபை உரிமையை மீறி செயல்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் 13 பேர், ஒரு பாஜ எம்எல்ஏவை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக