திங்கள், ஏப்ரல் 02, 2012

மீனவர்களை சுட்டுக்கொன்ற வீரர்களை இத்தாலிக்கு அனுப்ப முடியாது. உம்மன்சாண்டி !

மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்களை விசாரணைக்காக அந்நாட்டுக்கு அனுப்ப முடியாது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் 2 பேரை இத்தாலி சரக்கு கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் கடந்த பிப்ரவரி மாதம் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக இத்தாலி  வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் உள்ளனர். இத்தாலி வீரர்களை விசாரணைக்காக சொந்த நாட்டுக்கு
அனுப்ப வேண்டும் என்று இத்தாலி கோருகிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. கேரள முதல்வர் உம்மன் சாண்டியை இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் கியாம் பாவ்லோ சமீபத்தில் சந்தித்து பேசினார். 

இந்நிலையில், உம்மன் சாண்டி நேற்று அளித்த பேட்டியில், குற்றம் இந்திய கடல் எல்லையில்தான் நடந்துள்ளது. எனவே இந்திய சட்டப்படிதான் இத்தாலி வீரர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இத்தாலி வீரர்களை விசாரணைக்காக அந்நாட்டுக்கு அனுப்ப முடியாது.
நமது நீதித்துறை நியாயமாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவிலேயே நீதி கோரலாம். இந்த பிரச்னையில் மாநில அரசுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவு அளித்து வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக