இந்தியாவிலேயே முதன் முறையாக நடமாடும் மக்கள் நீதிமன்றம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் செக் மோசடி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன் பாக்கி வசூல் உள்ளிட்ட சிறு வழக்குகள் ஏராளமாக குவிந்துள்ளன. இந்த வழக்குகளை தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையம் நடத்தும் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றங்கள் தீர்த்து வைக்கின்றன. இதுபோன்ற வழக்குகளை மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று தீர்த்து வைக்கும் புதிய திட்டத்தை சட்டப் பணிகள் ஆணையக் குழு செயல்படுத்தியுள்ளது. இதற்காக நடமாடும் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் ஒப்புதலுடன் ^18 லட்சத்து 31 ஆயிரம் செலவில் நீதிமன்ற வசதிகள் அடங்கிய நடமாடும் நீதிமன்ற சிறப்பு பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் நீதிமன்றம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் வழக்குகளை தீர்த்து வைக்கும். ஒவ்வொரு இடத்திலும் இந்த நடமாடும் நீதிமன்றம் எப்போது செல்லும் என்று முறைப்படி அறிவிக்கப்படும். இதன் தொடக்கவிழா நேற்று தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தில் நடந்தது. தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் நடமாடும் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், அக்பர் அலி, அரி பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக