வியாழன், ஜனவரி 03, 2013

பாலியல் குற்றங்களுக்கு டெல்லியில் விரைவு நீதிமன்றம்! – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திறந்துவைத்தார் !

புதுடெல்லி:டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க டெல்லியில் விரைவு நீதிமன்றத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் புதன்கிழமை  திறந்து வைத்தார். இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்து
, அரசு விழித்துக் கொண்டிருப்பதாகக் கூறிய தலைமை நீதிபதி, இந்த முடிவை வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
விரைவாக நீதி கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக