வியாழன், ஜனவரி 03, 2013

மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தனர் - புதுவை மாணவி பரபரப்பு வாக்குமூலம !

புதுச்சேரி: எனக்கு மயக்க மருந்து கொடுத்து, மயக்க நிலையில் என்னைக் கொடூரமாக பலாத்காரம் செய்தனர் என்று புதுச்சேரி பிளஸ்டூ மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அவர் டாக்டரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 1-ந்தேதி வில்லியனூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ் கண்டக்டர் முத்துகுமரன் என்னிடம் உன் அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. உடனே வா என்று கூப்பிட்டார். எனவே அவருடன் நான் சென்றேன். என்னை பஸ்சில் அழைத்து சென்றார். அப்போது ஏதோ ஒரு வகை பொடியை முகத்தில் வைத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இரவு ஒரு குடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்துகுமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதி மயக்கத்தில் இருந்தேன். அப்போது இருட்டு அறைக்குள் இழுத்து சென்றனர். அங்கு 2 பேர் இருந்தனர். அதில் ஒருவன் என்னை கற்பழித்தான். அதன்பிறகு காலையில் விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன் என்று அவர் கூறியதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கஸ்தூரி தெரிவித்துள்ளார். தற்போது அந்த மாணவி நலமாக இருப்பதாகவும், உடலில் வேறு பெரிய காயம் இல்லை என்றும், லேசான மூச்சுத்திணறல் இரு்பபதாகவும் டாக்டர் கஸ்தூரி மேலும் தெரிவித்தார்
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக