வியாழன், ஜனவரி 03, 2013

கேரளா: 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை. . .

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆர்யா என்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ராஜேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம். கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் நாயர் மற்றும் ஜெயகுமாரி தம்பதியினரின் மகள் ஆர்யா 10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த ஆர்யாவிடம் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்டிருக்கிறார். ஆர்யாவும் அதை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அப்போது ஆர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த ராஜேஷ் அப்பெண்ணை பலாத்காரம் செய்து நகைகளைத் திருடிச் சென்றுவிட்டான். வீடு திரும்பிய ஆர்யாவின் அம்மா, மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு www.asiananban.blogspot.com அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கட்டக்கடா பகுதியைச் சேர்ந்தவரான ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார்தான் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமாரை மார்ச் 13-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ஆர்யாவின் நகைகளையும் மீட்டனர். பின்னர் 3 மாத காலவிசாரணைக்குப் பிறகு விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 8-ந் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. மொத்தம் 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி ராஜேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக