புதன், ஆகஸ்ட் 01, 2012

அமெரிக்காவின் தடைக்கு எதிராக ஈரான் புகார் அளிக்கும் !

CA8TI0NAடெஹ்ரான்:அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ஏற்படுத்தியிருக்கும் தடைகளுக்கு எதிராக ஈரான் புகார் அளிக்க உள்ளது.ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி இல்லாமல் இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி ஈரான் புகாரை அளிக்கும். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில்தான் இந்த புகார் அளிக்கப்படும் என ஈரானின் சர்வதேச சட்ட விவகாரங்களுக்கான
தலைவர் மஜீத் ஜாஃபர் ஸஅத் தெரிவித்துள்ளார்.
ஆனால், புகார் எந்த குழுவிடம் அளிக்கப்படும் என்பது குறித்து ஈரான் தெரிவிக்கவில்லை. அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரான் மீது எண்ணெய் தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக