
இவ்வழக்கில் குஜராத் மாநில அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவும், கவுன்சல் ஹேமந்திகா வாஷியும் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்பொழுது துஷார் மேத்தா கூறியது:
முன்பு ஒடிசாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை புனரமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த மாநில அரசு வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றி குஜராத்தும் அது போன்ற ஒரு திட்டத்தை வகுக்க ஆலோசித்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வழிபாட்டுத் தலங்களை புனரமைக்க மாநில அரசு வகுக்கும் திட்டத்தை அப்போது தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது. மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடைகோரும் குஜராத் மாநில அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக