வியாழன், ஆகஸ்ட் 02, 2012

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஜெர்மனில் போராட்டம் !

Muslims in Berlin rally against violence toward Rohingyas in Burmaபெர்லின்:மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இரண்டு மணிநேரம் நீண்ட போராட்டம் நடைபெற்றது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொலை, கொள்ளை ஆகியவற்றைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை தடுக்க ஜெர்மன் அரசு தனது செல்வாக்கை உபயோகிக்க
வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மியான்மர் முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டுமென்றே நடக்கும் முயற்சிகளை நிறுத்தக்கோரும் பெரிய பேனர்களும், அட்டைகளும் போராட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
பெளத்த வெறியர்களின் தாக்குதலில் பலியான முஸ்லிம் பெண்கள், குழந்தைகளின் ஃபோட்டோக்களையும் கையில் ஏந்தி்யிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக