வாஷிங்டன்: அமெரிக்காவில் சிறிய விமானத்தில் பயணித்த 80 வயது தம்பதியினர் நடுவானில் கணவர் திடீரென மயங்கியதால், மனைவியே விமானத்தை தரையில் இறக்கினார். ஆனால் மருத்துவ வசதி கிடைப்பதற்குள்ளாக கணவன் பரிதாபமாக இறந்தார்.அமெரிக்காவில் விஸ்கோன்சின் மாகாணத்தில் டோர்கவுண்டி செர்ரிலாண்ட விமானநிலையத்தில் இருந்து சிறிய விமானத்தில் கடந்த திங்களன்று 81 வயது கணவரும், 80 வயது மனைவியும் பயணித்தனர். நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் கணவருக்கு திடீரென மயக்கமும் நரம்பு தளர்ச்சியும் ஏற்பட்டதால் பதட்டம் அடைந்தார். அப்போது விமானம் நிலை தடுமாறியது. இதனை அருகில் இருந்த 80 வயது மனைவி சமயோசிதமாக செயல்பட்டு தானே விமானத்தை தரையில் இறக்க முயன்றார்.
அவர் இதற்கு முன்பு விமானத்தை இயக்கியதுமில்லை. அனுபவமும் இல்லை. எனினும் நிலைமை சமாளித்து பத்திரமாக விமானத்தை தரைஇறக்கினார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அதற்கு முன்பாகவே கணவர் இறந்துவிட்டார். முன்னதாக விமானம் அவசரமாக தரையிறங்கும் போது அதனை பெண் இயக்குவதை பார்த்து சிலர் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்
நடுவானில் கணவனின் உயிரை காப்பாற்ற துணிந்த மனைவியால் கடைசியில் தரையிறங்கியதும் கணவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக