வாஷிங்டன்:அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்திய மாணவி உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓய்காஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு நர்சிங் பாடம் படிக்கும் வகுப்பில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் நுழைந்த கொரிய நாட்டு நபரான கோ, மாணவர்களை வரிசையாக சுவரை நோக்கி நிற்கும்படி உத்தரவிட்டார்.
. சுவரை நோக்கி நின்ற மாணவர்களை, கோ, 43, சரமாரியாகச் சுட்டார். இதில் ஐந்து பேர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். பலத்த காயமடைந்த ஐந்து பேரில் இரண்டு பேர், ஆக்லாந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவிந்தர் கவுருக்கு 19. வலது முழங்கையில் குண்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களைச் சுட்டுகொன்ற கோ, இந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்றும், எதற்காக இவர் துப்பாக்கியால் சுட்டார் என்ற விவரம் குறித்தும் அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.தங்கள் மகள் தேவிந்தர் கவுர், துப்பாக்கி காயத்துடன் உயிர் பிழைத்துள்ளது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோ, துப்பாக்கி சூடு நடத்தியதில் கீழே விழுந்த மாணவர்களைத் தூக்கச் சென்றபோது, தேவிந்தர் கவுருக்கு காயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக