செவ்வாய், ஏப்ரல் 10, 2012

மாயாவதி மீது ஊழல் விசாரணை கமிஷன் : அகிலேஷ் யாதவ்


உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி மீது ஊழல் விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். 
உத்திர பிரதேசத்தின் மாநில முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவி ஏற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் மாயாவதி மீது ஊழல் விசாரணை நடத்தப்படும் என்று சமாஜ்வாடி கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. 

அதன்படி லக்னோ உயர் நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மாயாவதி மீது ஊழல் விசாரணை நடத்தப்படும் என அகிலேஷ் உத்தர விட்டுள்ளார். அவர் பதவி ஏற்ற 24 நாட்களில் 1000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை இட மாற்றம் செய்து உள்ளார். 
அவர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு விசுவாசமானவர்கள் என கூறப்படுகிறது. இந்த மாற்றங்களால் அரசு எந்திரத்தில் கோளாறு ஏற்படும் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் மேலும் 68 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக