ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறிய குற்றச்சாட்டு குறித்து ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் தேஜேந்திர சிங், வி.கே. சிங் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவர் இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் அவரிடம் பேரம் பேசியவர்கள் சொன்ன வகை வாகனங்கள்ஏற்கனவே சுமார் எழாயிரம் தற்போது நம் ராணுவத்தில் இருக்கின்றனஎன்றும் கூறினார்.
மேலும் இது பற்றி கேள்வி கேட்க யாரும் இல்லை என கூறி பெரும்சர்ச்சையை கிளப்பினார். இவ்வாறு பேசியதை எதிர்த்து டில்லிநீதிமன்றத்தில் தளபதி வி கே சிங் மீது அவதூறு வழக்கை தெஜிந்தர்சிங் தொடுத்தார்.
அவ்வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் தேஜேந்திர சிங் ஆஜராகி கூறியதாவது, ராணுவ தலைமை தளபதி கூறிய இந்த குற்றச்சாட்டு தாக்குதல் மூலம் நான் மிகவும் நிலை குலைந்து போய் உள்ளேன். டாட்ரா வேட்ரா லிமிடெட் சார்பில் எனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக கூறப்பட்டது. அது முற்றிலும் தவறானது. அப்படி எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக