ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

ராமஜெயம் படுகொலையை அடுத்து கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல்!திமுக


முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் வாக்கிங் சென்ற போது படுகொலை செய்யப் பட்டார்.
இந்நிலையில் நேற்று திமுக அலுவலகத்துக்கு காலையில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. வாட்ச்மேன் பவுன்ராஜ் எடுத்துப் பேசிய போது எதிர்முனையில் பேசிய மர்ம ஆசாமி எங்களின் அடுத்த இலக்கு கே.என்.நேரு தான் என்று மிரட்டியுள்ளான்.

கே.என்.நேருவுக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது. வாட்ச்மேன் பவுன்ராஜ் தொலைபேசியில் பேசிய மர்ம ஆசாமி சென்னைத் தமிழில் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
கொலைமிரட்டல் குறித்த விசாரணையைத் துவக்கியுள்ள காவல்துறையினர்  தொலைபேசியில் பதிவான எண்ணை கண்டுபிடித்துள்ளனர். மதுரையில் இருந்து செல்போன் மூலமாக மர்ம ஆசாமி பேசி இருப்பதாக கண்டுபிடித்துள்ள காவல்துறையினர் மிரட்டல் ஆசாமியை பிடிக்க மதுரை விரைந்துள்ளனர்.
ராமஜெயம் கொலைக்கு துப்பு கிடைக்காத நிலையில் கே.என்.நேருவுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக