ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

ஒடிசா அரசுக்கு மாவேயிஸ்ட் புதிய நிபந்தனை

புவனேஸ்வர்: தங்களின் கூட்டாளிகளை விடுவிக்க கோரி ஒடிசா மாநிலஅரசுக்கு மேலும் ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளனர் மா‌வோயிஸ்ட் தீவரவாதிகள் . மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்களின் சகாக்களை விடுவிக்‌க ‌கோரி இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவரையும், ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரையும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திசென்றனர்
.தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்ற மாநில அரசு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 பேரை விடுவிக்க ஒப்புக்கொண்ட நிலையில் மேலும் ஐந்து பேரை விடுவிக்க வேண்டும் எனவும் வரும்‌ 10-ம் தேதிக்குள் இதனை நிறைவேற்றவேண்டும் என கோரிக்‌கை விடுத்துள்ளனர். தங்களது ‌‌கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை மாநில அரசு எழுத்துபூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரசு தரப்பில் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழுவிற்கு தலைமை வகித்துள்ள உள்துறை செயலாளர் பெஹரா பேச்சுவார்த்தையில் முன்‌னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக