பெங்களூர்:மீண்டும் முதல்வர் பதவியை பிடிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள எடியூரப்பாவை பா.ஜ.க மேலிடம் நம்பவைத்து கழுத்தை அறுக்குமா? என்ற சந்தேகம் அவருக்கு எழுந்துள்ளது.
பெங்களூரில் தனது ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) அவர் கூறியது:
சுரங்க முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அளித்த புகார் அறிக்கையிலிருந்து மீண்டு வந்ததும் முதல்வர் பதவியைத் தருகிறோம் என்று, பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். தற்போது பல்வேறு காரணங்களால் என்னை அமைதி காக்கும்படி தெரிவித்துள்ளனர்.
விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி நடக்கவில்லை என்றால் எனது நடவடிக்கை குறித்து அப்போது அறிவிப்பேன் என்றார் எடியூரப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக