ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரையும், இத்தாலி நாட்டவரையும் மீட்க சிறையில் உள்ள மாவோயிஸ்ட்கள் உட்பட 27 பேரை விடுவிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இருவரை கடத்தினர். கடத்தப்பட்ட இத்தாலிய சுற்றுலாப்பயணிகளை மீட்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஆளும் பிஜு ஜனதாதள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜினா ஹிகாகா என்பவரும் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டார். பின்னர்
இத்தாலியர்களில் ஒருவர் மட்டும் மார்ச் 25 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
கடத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமானால் மாவோயிஸ்ட்கள் உட்பட 27 பேரை விடுவிக்க ஒடிசா அரசு முன்வர வேண்டும் என மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்திருந்தனர். இந்த நிபந்தனையை ஏற்று சிறையில் உள்ள மாவோயிஸ்ட்கள் உட்பட 27 பேரை விடுவிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து அந்த 27 பேரும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் 15 பேர் 'சாசி முலியா' என்ற ஆதிவாசிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் நக்ஸலைட்கள் என்றும், 4 பேர் ஒடிசா மாநில மாவோயிஸ்ட் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக