கடந்த, 90ம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்ரமித்ததால் வளைகுடா போர் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஈராக் மீது பொருளாதார தடைகள் அமல்படுத்தப்பட்டன. ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின் புதிய ஆட்சியினர், குவைத்துடன் உறவை மேம்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குவைத்தை சேர்ந்த ஜசீரா ஏர்வேஸ் நிறுவனம் ஈராக்குக்கு நேரடி விமானங்களை இயக்க அனுமதி
கோரியிருந்தது. இதற்கு ஈராக் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக பாக்தாத் மற்றும் நஜாப் நகரங்களுக்கு வாரத்திற்கு நான்கு விமானங்களை, ஜசீரா நிறுவனம் இயக்க உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக