ஈராக்கில் போலீஸ் அதிகாரிகளை இலக்காக கொண்டு மர்ம நபர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள போலீஸ் முகாமில் ஆட்சேர்ப்பு பணி நடந்தது. அப்போது அங்கு தாக்குதல் நடத்தும் நோக்கில் காருடன் மர்ம நபர் ஒருவன்
வந்துள்ளான். பின்னர் தேர்வுக்கு வந்தவர்களுடன் போலீசாரும் வெளியே வந்தனர். அதற்காக காத்திருந்த மர்ம நபர் பொருத்தியிருந்த வெடிகுண்டுடன் காரை வெடிக்கச் செய்தான். அதில் 18 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக