கோலாலம்பூர்,
மார்ச் 6- சபா, லஹாட் டத்துவில் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலைத்
தொடர்ந்து பிலிப்பைன்ஸில் வாழும் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என
வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
சில நாட்களாகவே பிலிப்பைன்ஸ் சூலு சுல்தானின் படையினர் என கூறிக்கொண்டு லஹாட் டத்துவில் ஊடுருவியுள்ள ஊடுருவல்காரர்களை அழிக்கும் நோக்கில் மலேசியப் பாதுகாப்புப் படையினர் நேற்று தாக்குதலைத் தொடங்கினர். இதனால், பிலிப்பைன்ஸில் வாழும் மலேசியர்கள் தங்களின் அன்றாட வேலைகளைக் கவனிக்கும் போது தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு கேட்டுகொண்டுள்ளது 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக