டெல்லி: நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழல் நடந்தது தொடர்பான முதல் கட்ட முக்கிய ஆவணங்கள் இத்தாலியிடம் இருந்து இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
ரூ.3600 கோடி செலவில் 12 அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலியின் பின்மேக்கானிக்கா நிறுவனத்திடம் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த முறைகேட்டில் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
ஆனால் இந்தியா கோரியபடி ஹெலிகாப்டர் லஞ்ச பேர ஊழல் பற்றிய முக்கிய ஆவணங்களை வழங்க இத்தாலி நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில் தூதரக உறவுகள் மூலமாக தற்போது முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் ஹெலிகாப்டர் லஞ்ச பேர ஊழல் பற்றி இத்தாலி காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணை அறிக்கை வழங்க இத்தாலி மறுத்து விட்டது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக