வியாழன், மார்ச் 14, 2013

முஸ்லிம்களின் ஒற்றுமை மற்றும் போராட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி - இடிக்கப்பட்ட கெளஸியா மஸ்ஜித் மீண்டும் கட்டப்படுகிறது!

புதுடெல்லி: முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையுடன் போராடியதன் விளைவாக தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள கவுஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்த மஸ்ஜித் மற்றும் வீடுகள் மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன. மஸ்ஜிதின் கட்டிடப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இடிக்கபட்ட வீடுகளை திரும்பவும் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. தற்போது தற்காலிக டெண்டுகளில் வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கெளஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் புல்டோசரை பயன்படுத்தி வீடுகளையும், 400 ஆண்டுகால பழமையான மஸ்ஜிதையும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளினர். இதற்கு எதிராக சோசியல் டெமோக்ரேடிக் பார்ட்டி தலைமையில் காலனி வாசிகளை ஒன்றுதிரட்டி கெளஸியா காலனி மறுவாழ்வு பேரவையை உருவாக்கி போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை ஒன்றிணைத்து வக்ஃப் பச்சாவோ தெஹ்ரீக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஷாஹி இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரம் அறங்காலவராகவும், எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இவ்வமைப்பின் செயல்பாட்டினால்தான் மஸ்ஜித் மீண்டு கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
மீண்டும் கட்டப்படும் கெளஸியா காலனி மஸ்ஜிதுக்கு நேற்று முன் தினம் எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் சென்று பார்வையிட்டார். மஸ்ஜித் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டு காலனி மக்களுக்கான மறுவாழ்வு பணிகள் முடிவடையும் வரை எஸ்.டி.பி.ஐ முழு ஆதரவை அளிக்கும் என்று இ.அபூபக்கர் உறுதி அளித்தார். காலனிவாசிகளான முஸ்லிம்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும், போராட்ட உறுதியையும் இ.அபூபக்கர் பாராட்டினார்.
1
வீடுகள் மற்றும் பள்ளியை மீண்டும் கட்டிதரகோரி எஸ்.டி.பி.ஐ உள்பட பல அமைப்புகள் ஒன்று இணைந்து நடத்திய போராட்டங்கள் 
இடிக்க பட்ட மஸ்ஜித்


அமைச்சர் கமல்நாத் வீட்டை முற்றுகையிட்டு  உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தன்வீர் அருகில் எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் 

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் நடந்த  கலந்துரையாடல் 
தங்கள் வீடுகளை இழந்தும் குடியரசு தினத்தை மறக்காமல் கொண்டாடிய  கௌசிய காலனி மக்கள் 

டெல்லி முதல்வரை சந்தித்த பொழுது உடன்  ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தன்வீர், எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் மற்றும் நிர்வாகிகள் 

இடிக்கப்பட்ட மஸ்ஜிதை மீண்டும் கட்டித்தர கோரி நடந்த பாராளுமன்றம் நோக்கி நடந்த பேரணி 

வீடு இழந்தவர்களின் கண்ணீர் வாக்குமூலம் 

பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது 

பள்ளி மற்றும் தன் வீடுகளை இழந்த மக்கள் நடுரோட்டில் வசித்த பொழுது 

முன்பு பாதிக்க பட்ட மக்களுக்கு SDPI தேசிய தலைவர் ஆறுதல் கூறிய பொழுது அருகில்  ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தன்வீர், எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் மற்றும் நிர்வாகிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக