ஊடகங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை நீதிபதி மார்கண்டேய கட்ஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ள கருத்தில், " சிறுபான்மையினர் தேசிய கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா தமக்கு எழுதிய கடிதத்தில், ஐதராபாத் வெடிகுண்டு தாக்குதலில், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தது ஊடகங்கள்தான்" என்று சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக திரித்துக் கூறுவதால் வேலைவாய்ப்புகள் பெருமளவில் மறுக்கப்பட்டு வருகிறது என்றும் சச்சார் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், இஸ்லாமியர்கள் மீதான தவறான அனுகுமுறையால் காவல்துறையினராலும் அப்பாவி இஸ்லாமியர்கள் துன்புறுத்தப் படுகின்றனர்.
எனவே ஊடகங்களுக்கு சமூக பொருப்பு உள்ளது. எனவே செய்தி வெளியிடும்போது உணமை தன்மையின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படாதபடி செய்திகள் வெளியிட வேண்டும் என்று கட்ஜு ஊடகங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக