பாட்னா: குஜராத்தில் காட்டப்படும் வளர்ச்சி மோசடியான வளர்ச்சி; தேசிய அளவில் வளர்ச்சியை நரேந்திர மோடியால் ஏற்படுத்த முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் கூறியுள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடுச் செய்த ‘ஆம் சபா’ நிகழ்ச்சியில் பிரகாஷ் காரத் பேசியது:
குஜராத்தில் எந்த மாதிரியான வளர்ச்சியை மோடி ஏற்படுத்தியுள்ளார் என்பது அனைவருக்குமே தெரியும். சாதாரண மனிதர்களின் நலன்களை அடகு வைத்து, பெரும் தொழில் நிறுவனங்களுக்குதான் அங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தலித்துகளும், மலைவாழ் மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவரது குஜராத் பாணி வளர்ச்சி தேசிய அளவில் செல்லுபடியாகாது.வெறும்
தேர்தல் கூட்டணியில் சி.பி.எம்மிற்கு விருப்பமில்லை. ஆனால், எங்களது வளர்ச்சித் திட்டங்களை ஏற்றுக் கொள்பவர்களுடன்தான் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்றார்.
தொடர்ந்து மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்துப் பேசிய அவர், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த மசோதாவைப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்துவிட வேண்டுமென்ற பசி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டம் மூலம் நாட்டில் உள்ள 67 சதவீதம் பேருக்கு உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் குறைந்தபட்சம் 90 சதவீதம் பேர் இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சர்வதேச அளவில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் வேண்டுமென்று எங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி இம்மாதம் 19-ம் தேதி டெல்லியில் பேரணி நடத்த இருக்கிறோம். அப்போது இடதுசாரிக் கட்சிகளுக்குள் உள்ள ஒற்றுமை வெளிப்படும் என்றார் பிரகாஷ் காரட்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக