புதுடெல்லி:பத்திரிகையாளர் உள்ளிட்ட சமுதாயத்தின் பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய்யாக வழக்கை ஜோடித்து அநியாயமாக கைது செய்யப்பட்ட டி.ஆர்.டி.ஓ மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச் செயலாளர் சி.ஏ.ரவூஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் வீட்டை நோக்கி பேரணி நடத்த உள்ளது. சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட இஜாஸ் அஹ்மத் மிர்ஸா மீது ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நிரபராதியான இஜாஸ் மிர்ஸாவுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக