புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு வாதம் வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணையும், குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் விவாதமும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அரசு வழக்கறிஞரின் வாதம் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 17-ஆம் தேதியும், 24-ஆம் தேதியும் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் ஆஜராகி இரண்டு நாட்களிலும் சுமார் இரண்டு மணிநேரம் குற்ற செயலில் குற்றம் சாட்டப்பட்டோர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
கடந்த 24-ஆம் தேதி மேலும் தனது வாதத்திற்கு நேரம் கேட்டதை அடுத்து, இந்த வழக்கை இன்றைக்கு நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.
அதன்படி இன்று நடைபெற இருந்த விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 7 பேர் ஆஜராகினர். சங்கராச்சாரியார்கள் உட்பட 17 பேர் ஆஜராகவில்லை.
இன்று தலைமை நீதிபதி முருகன் விடுமுறையில் இருந்ததால், இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிபதி மோகன்தாஸ் முன்னிலையில் வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக