சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள போராளிகள் அரசுப் படைக்கு எதிராக 2 வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்துள்ள இந்த சண்டைக்கு குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருவதோடு வீடுகளும் தரைமட்டமாகி வருகின்றன.
இதனால், உயிருக்கு பயந்து அப்பாவி மக்கள் பக்கத்து நாடுகளான ஜோர்டான், லெபனன், துருக்கி, ஈராக் மற்றும் எகிப்து நாடுகளில் தஞ்சம் தேடி வருகின்றனர். இவ்வாறு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை இந்த வருடத்திலிருந்து இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதில் பாதிக்கு மேற்பட்டவர்கள், 11 வயதிற்கு உட்பட்டவர்களே என்கிற செய்தி மிகவும் மனவேதனை அளிக்கிறது. ஒரு அறையில் 20 பேர் இருந்து வருகிறார்கள். இதனால் வசதிகள் இன்றி அவர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று ஐ.நா. மனித உரிமை உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இவ் உள்நாட்டுச் சண்டையில் பாதிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்கு உலக நாடுகள் உதவுமாறு ஜோர்டன் மன்னர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக