உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதி கங்கா நகர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் திபெத் மதத் தலைவர் தலாய் லாமா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது லஞ்சம் குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்குவதற்காக மகாத்மா காந்தி போன்றோர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அப்படி வாங்கப்பட்ட இந்தியாவை, இன்று அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்கின்றனர். இந்தியாவின் மிக முக்கியப்பிரச்சினை லஞ்சம். இதுவே நாட்டை பலஹீனமாக ஆக்குகிறது.
இந்தியக்குடிமக்கள் இந்த லஞ்சம் தொடர்பான பிரச்சினையை தினந்தோறும் சந்திக்கின்றனர். இந்தியாவில் நக்சலிசம் ஏற்றுக்கொண்டுள்ள வழிகள் தவறானவை, இருந்தும் அவர்களின் கோரிக்கைகளை நாம் ஒதுக்கி தள்ளிவிட முடியாது.
பல்வேறு மதத்தினர் இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது இந்தியாவிற்கு பெருமை தரக்கூடிய ஒன்று. ஆனால் சாதி மற்றும் வரதட்சணை போன்ற விசயங்களை நான் வெறுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக