புதன், மார்ச் 06, 2013

நாட்டில் பணவீக்கம் ஏற்பட காங்கிரஸ்-பாரதீய ஜனதா கட்சிகளே காரணம்: பிருந்தா காரத் !!

நாட்டில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து வருவதற்கு, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளின் கொள்கைகளே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் பொலீட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறியதாவது:-

காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை நிரூபிக்கும் விதத்திலேயே, வேகம் காட்டினார்களே அன்றி, நாட்டின் நலன்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. 

ஒவ்வொரு நாளும் இரண்டு கட்சிகளும், நாட்டை சுரண்டுவதில் பரஸ்பரம் அக்கறை காட்டியதால் இன்று நாடு பலவீனம் அடைந்து இருக்கிறது. இரு கட்சிகள் கொண்டுவந்த கொள்கைகளே, நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட காரணமாயிற்று. 

எனவே நாட்டின் இந்த நிலைக்கு காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவே பொறுப்பு. மூன்றாவது அணி அமைப்பது குறித்து, தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக