புதன், மார்ச் 13, 2013

அப்ஸல் குரு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது – மத்திய அமைச்சர் ஷிண்டே பிடிவாதம்!

புதுடெல்லி:கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அநியாயமாக தூக்கிலிடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்ஸல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது:கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவின் உடல் திகார் சிறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினரும், ஜம்மு கஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கோரி வருகின்றனர்.
சிறை விதிகளின்படி குருவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவரது உடலை ஒப்படைக்க முடியாது. எனினும், குருவை அடக்கம் செய்த இடத்தில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தலாம் என்றார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக