பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிடுக்குப் பிடி கேள்விகளைக் கேட்டார். ஆனால் அசராத சுதாகரனோ தமது கல்யாணம் பற்றிய கேள்விகளுக்குக் கூட தெரியாது என்றே பதில் கூறியிருக்கிறார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன. அபிராமி பில்டர்ஸ், ரிவர்வே என்டர்பிரைசஸ், அக்ரோ பிரைவேட் லிமிடெட், மெடோ ஃபார்ம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட நீண்ட..........கேள்விகளுக்கும் கூட "தெரியாது" என்ற ஒற்றை வரி பதிலையே திரும்ப திரும்ப சொனார் சுதாகரன். நீதிபதியும் விடுவதாக இல்லை....பல கட்டிட மதிப்புகளைக் குறிப்பிட்டு தொடர்ந்து கேள்விகேட்க சுதாகரனோ அலட்டிக் கொள்ளாமல் 'தெரியாது'என்றே கூறினார். நீதிபதியோ உச்ச உஷ்ணத்தில் கேள்வி கேட்க, சுதாகரனோ ஹாயாக தெரியாது என்றே ஜாலியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெயலலிதா மற்றும் போயஸ் தோட்டம் தொடர்பான கேள்விகளின் போதுதான் சற்றே கவனிக்கத் தொடங்கினார். நீதிபதியுடம் ஆஹா பதில்கள் வரப்போகிறது என்று எண்ண சுதாகரனோ, அதே ஐ டோன்ட் நோ, தெரியாது என்றே சொல்லி வந்தார். விசாரணையின் 3-வது நாளில் உச்சகட்ட காமெடி அரங்கேறியது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் மிகவும் முக்கியமானதே சரித்திரம் பேசும், வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம்தான். ஆனால் சுதாகரனோ அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. " உங்களின் திருமணச் செலவுக்காக ஜெயலலிதா கையெழுத்திட்ட 5.91 கோடி ரூபாய் காசோலை பற்றி தெரியுமா?'' கேட்க " எல்லா செலவுகளையும் மனைவி வீட்டார் செய்தனர்" என்று சொல்லிவிட்டார். சுதாகரனின் திருமணத்துக்காக 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சிடுவதற்கு ஜெயலலிதா 1.15 லட்சத்துக்கு காசோலையில் கையெழுத்திட்டது, திருமணத்துக்காக யூனிட் டூல்ஸ் நிறுவனத்தின் ஆறு ஆடம்பர கார் களைப் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதா செக் கொடுத்தது, அ.தி.மு.க. அலுவலகத்தில் பணியாற்றும் பாபு என்பவரிடம் 50 ஆயிரம் அழைப்பிதழ்களை அச்சிடுவதற்கு 64 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தது, திருமணத்தின்போது வாங்கப்பட்ட 450 சட்டைகள், 450 பேன்ட்கள், 45 சிக்நோரா ஆடைகள் ஆகியவற்றுக்கான தையல் கட்டணமாக ரூ1,41,800க்குஜெயலலிதா கையெழுத்திட்டுக் கொடுத்தது என பல கேள்விகள் நீடிக்க சுதாகரனோ "தெரியாது" என்று சொல்லி கடுப்பேற்றினார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 632 கேள்விகளுக்கு சுதாகரன் பதில் சொல்லி இருக்கிறார். இன்னும் 282 கேள்விகள் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக