புதுடெல்லி:தென் சீன கடல் பகுதி உலகத்திற்கே சொந்தமானது என்று சீனாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதிலடி கொடுத்துள்ளார். சீனாவின் தென்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க இந்தியாவிற்கு கடந்த ஆண்டு நடந்த ஏசியான் உச்சி மாநாட்டின் போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி ) நிறுவனம் அங்கு கச்சா எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு சீனா கடும் ஆட்சேபமும், எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, தங்கள் நாட்டின் தெற்கு கடல் பகுதியிலிருந்து இந்தியா உடனடியாக வெளியேறவிட்டால், இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியது வரும் என சீனா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் இது குறித்து கேட்டபோது, “தென் சீன கடல் பகுதியை உலக சொத்தாகத்தான் இந்தியா கருதி வருகிறது” என்றார்.
மேலும் இந்த உண்மையை ஏசியான் நாடுகள் மட்டுமல்லாது, ஏசியான் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளூடனான பேச்சுவார்த்தையின் போது சீனாவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக