செவ்வாய், ஏப்ரல் 03, 2012

அப்பாவிகளைத் துன்புறுத்துவதை நிறுத்துக! - முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை


காவல்துறை மற்றும் உளவுத்துறை நிறுவனங்களால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அப்பாவிகளை சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்திருத்தல் மற்றும் விசாரணையின்போது இழைக்கப்படுகின்ற ரோதனைகளை நிறுத்தும்படியான கோரிக்கை தலைநகர் டெல்லியில் முதன்முதலாக ஒலித்துள்ளது.
நீதியரசர் ராஜேந்திர சச்சார் தொடங்கி வைத்த தேசிய முஸ்லிம் இளைஞர் பாதுகாப்பு ஆணையக கருத்தரங்கில் கலந்து கொண்ட தேசிய முஸ்லிம் தலைவர்கள் ஏகமனதாக இந்தக் கோரிக்கையை அரசுக்கு வைத்தனர்.
மேலும், தடா, பொடா போன்ற கருப்பு சட்டங்களைவிட மோசமான UAPA , SIMI மீதான தடை மற்றும் நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஆகியவை குறித்தும் பேசப்பட்டன.
தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் பொய்வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களைச் சிக்கவைத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டன.
மேலும், 14 வருடங்களை சிறையில் கழித்து, குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு வெளிவந்த முகமது அமீர்கான் என்ற இளைஞர் தனது சிறைக்கொட்டடி வாழ்க்கையை கண்ணீருடன் எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கில் All India Milli Council, All India Muslim Majlis Mushawarat, Jamaat-e-Islami Hind, Jamiat Ulama-I-Hind, Welfare Party of India, and Coordination Committee for Indian Muslims and Markazi Jamiat Ulema ஆகிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக