உ.பி.யில் சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ள செல்களுக்கு குளிர்சாதன வசதி செய்து தர அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ்யாதவ் அமைச்சரவையில், சிறைத்துறை அமைச்சராக , ரகுராஜ் பிரதாப்சிங் என்ற ராஜாபையா உள்ளார். இவர் மீது பல்வேறு காவல் நிலைங்களில் வழக்குகள் உள்ளன. பொடா சட்டத்தின் கீழும் கைதாகி சிறை சென்றார். இந்நிலையில் நடந்து முடிந்த உபி.சட்டமன்ற தேர்தலில்
வெறறி பெற்று, அகிலேஷ்யாதவ் அமைச்சரவையில் இடம் பெற்றார். பின்னர் அமைச்சராக பொறுப்பேற்றப்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லக்னோ சிறைக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக இரு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார்.இது போன்று நேற்றும் அமைச்சர் ராஜாபையா லக்னோ சிறைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சிறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். அதன்படி அடுத்த 90 நாட்களுக்குள் சிறைச்சாலைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முதல்கட்டமாக குற்றவாளிகளான கணவன், மனைவி இருந்து, அவர்கள் வெவ்வேறு சிறைகளில் இருந்தால், அவர்களை ஒரே சிறைச்சாலையில் வைக்கும்படியும், சிறைக்கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு மாதம் ஒரு முறை இருந்ததை இருவாரத்திற்கு ஒருமுறையாக மாற்றியும் உத்தரவிட்டார். மேலும் சிறைகளில் கைதிகளின் நலனை கருத்தில் கொண்டு, கோடை காலங்களில் குளிர்சாதன வசதி செய்து தரும்படி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக