நித்தியானந்தா, ரஞ்சிதா இன்று மதுரை ஆதீனம் மடத்துக்கு சென்றனர். இவர்களுடன் நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பலரும் சென்றனர். மதுரை ஆதீனம் மடத்தில் நவீன வசதி கொண்ட அறைகளில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தங்கினர்.நித்தியானந்தா ஆதீனத்துக்கு 7 கிலோ வெள்ளி செங்கோல் ஒன்றை அளித்தார். பதிலுக்கு ஆதீனமும் நித்தியானந்தாவுக்கு செங்கோல்ஒன்றை அளித்தார். ஆதீனத்துக்கு வெள்ளியில் அமரும் இருக்கை ஒன்றை வாங்கி தரப்போவதாக நித்யானந்தா தெரிவித்தார். நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் 2பேரை மதுரை ஆதீனம் மடத்திற்கு வழங்கினார் நித்யானந்தா.
சிந்திக்கவும்: அது என்ன மதுரை ஆதீனம் சாதாரண நாற்காலியில் உட்கார மாட்டாரா?எத்தனையோ ஏழை, எளிய மக்கள் பசியிலும், பிணியிலும் வாடும்போது அவர்களுக்கு இந்த பணத்தை செலவு செய்யலாமே. முற்றும் துறந்த சாமியார்களுக்கு எதற்கு வெள்ளி செங்கோல்.ஏன் இந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்யலாமே.
நித்யானந்தா ரஞ்சிதாவை திருமணம் செய்து கொள்ளலாம் யாரும் அதை பற்றி கருத்து சொல்ல மாட்டார்கள். இதை விட்டு தனது வெளுத்து போன சாமியார் மற்றும் துரவர வேஷத்தை மீண்டும் கட்டி எழுப்ப மதுரை ஆதீனம் முதல் பலரை சந்தித்து பொன்னையும் பொருளையும் கொடுத்து சரிந்து விழுந்த தன் இமேஜை கட்டி எழுப்பலாம் என்று குறுக்கு வழியில் யோசிப்பதே இங்கே விவாதப்பொருலாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக