செவ்வாய், ஏப்ரல் 03, 2012

மகாத்மா காந்தியின் ரத்தக்கறை படிந்த புற்கள் லண்டனில் ஏலம் !

Gandhi's glasses, letters to be auctioned in UKமகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி மற்றும் ராட்டை உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. டில்லியில், 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள், ஹிந்துத்துவ தீவிரவாதி  கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது குண்டு துளைத்ததால், அவர் உடலில் இருந்து சிதறிய ரத்தம் அங்குள்ள புல்களின் மீது படிந்தது. இதை அவருடன் இருந்த பி.பி.நம்பியார் சேகரித்து வைத்திருந்தார்.
காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் ஆகியவற்றை ஒரு
பெட்டியில் புனிதமாக சேகரித்து வைத்திருந்தார் நம்பியார். இதேபோல காந்தி பயன்படுத்தி வந்த ராட்டை, மூக்கு கண்ணாடியையும் அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார்.
தற்போது இந்த பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், "முல்லக்' ஏல நிறுவனத்தால், வரும் 17ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. மகாத்மாவின் உடமைகளான இவை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக