மற்றவரின் கருத்தை காப்பியடித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதிய சர்ச்சை தொடர்பாக ஹங்கேரி நாட்டு அதிபர் பால் ஸ்கிமித் பதவி விலகியுள்ளார்.ஹங்கேரி அதிபராக கடந்த 2010ம் ஆண்டு பொறுப்பேற்றார் பால் ஸ்கிமித். இவர் கடந்த 92ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு குறித்த 200 பக்க ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார். ஆனால், இந்த ஆய்வு கட்டுரை, மற்றவர் எழுதியது என கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையானது.
இதை தொடர்ந்து இவர் பதவி விலக வேண்டும், என எதிர்கட்சியினர் வற்புறுத்தினர்.கடந்த வாரம், இவர் தான் பெற்ற பி.எச்டி., பட்டத்தை உதறினார். இந்நிலையில், இவர் பதவி விலகும் கோரிக்கை வலுத்ததால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்
.ஜெர்மன் நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்த கார்ல் தியோடர் சு குட்டன் பர்க்கும், இதே போன்ற குற்றச்சாட்டுக்காக கடந்தாண்டு பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக