தொடர்ந்து வெளியாகும் ராணுவ ரகசியங்களால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய ராணுவம் வசமுள்ள ஆயுதங்கள் 10 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசு விழிபிதுங்கி நிற்கிறது.
சமீபத்தில் ராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் புதிய புயலைக் கிளப்ப தொடர்ந்து டெல்லியில் ஏன் ராணுவம் குவிக்கப்பட்டது என்ற சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சானல் வெளியிட்ட செய்தியில், இந்தியாவுக்கும்
பிறநாட்டுக்கும் போர் ஏற்பட்டால் இந்திய ராணுவத் தடவாளங்கள் 10 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது என்ற புதிய குண்டைத் தூக்கி போட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்திற்கு ரானுவத் தலைமை எழுதிய கடிதத்தில் ஏற்கனவே நாட்டின் ராணுவத் தயாரிப்பு நிலையில் ஏகப்பட்ட இடைவெளி உள்ளதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அந்த தொலைக்காட்சி செய்தியால் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
ராணுவத்தில் போருக்கான தளவாடங்களின் கையிருப்பு நிலை குறித்து மத்திய அரசுக்கு ராணுவம் அவ்வப்போது தெரிவித்திருந்தது என்றும் திடீர் போர் ஏற்பட்டால் 10 நாட்களுக்கு மட்டுமே இப்போதிருக்கும் ஆயுதங்கள் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அந்தச் செய்திகைல் கூறப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இதேபோல் கூறுகயில் 5.85 நாட்களுக்கே தளவாடங்கள் போதுமானது என்று கூறபட்டிருந்தது. இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து வரவேண்டிய ஆயுதங்கள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்கள் தவிர உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் ஆயுதங்களின் கையிருப்பும் குறைவாகவே உள்ளதாக அந்தச் செய்தி அதிர்ச்சியூட்டியுள்ளது.உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கித் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் பல மோசமான தரத்தில் இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
2008ஆம் ஆண்டு ராணுவம் இது குறித்து கூறுகையில் 125MM ரக குண்டுகள் அல்லது தோட்டாக்கள் 86,000 ரவுண்டுகளுக்கும் மேல் பழுதாக உள்ளது என்று தெரிவித்திருந்தது.
முன்பு மத்திய அரசு, போர் என்று வந்தால் நாட்டின் ஆயுதக் கையிருப்பு 30 நாட்களுக்கு இருக்கிறது என்று கூறியதற்கும் தற்போது 10 நாட்களுக்குத் தாங்காது என்ற செய்திகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. தென்சீன கடல் பிராந்தியத்தில் இந்தியா பெட்ரோல் எடுப்பதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக