செவ்வாய், ஜனவரி 17, 2012

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக யூசுப் ராஸா கிலானி அறிவிப்பு !

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக தயாராக இருப்பதாக யூசுப் ராசா கிலானி அறிவித்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி இன்று(16.1.2012) அதிபர் சர்தாரியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிலானி, நாடாளுமன்றம் விரும்பினால் பதவி விலக தயாராக உள்ளதாக அதிபர் சர்தாரியிடம் கூறியுள்ளதாக கிலானி தெரிவித்தார். மேலும் கிலானி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகவும் முடிவு செய்துள்ளார். உச்ச நீதிமன்றம் அனுப்பிய சம்மனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி ஆஜாராகும் முடிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக