சனி, ஜனவரி 28, 2012

போதைப் பொருள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த புலிகள் !

போதைப் பொருள் விற்பனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்து உள்ளது என அமெரிக்கா அவதானித்து உள்ளது. ஆசியாவின் போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2009 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலமாக தமிழ். சி. என். என் இற்கு இது சம்பந்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன தமிழீழ விடுதலைப் புலிகள் 1983 ஆம் ஆண்டு
முதல் ஹெரோயின், கஞ்சா போன்றவற்றை விநியோகித்து வந்து உள்ளனர்.
ஆசியாவில் உற்பத்தி ஆகின்ற இடங்களில் இருந்து பெற்று மொத்தமாக வாடிக்கையாளர்களின் நாடுகளுக்கு விநியோகித்து உள்ளனர்.

புலிகளின் போதைப் பொருள் வியாபாரத்துக்கு பிரதான தளமாக மும்பை இருந்து வந்து உள்ளது.

இந்தியாவில் இருந்து போதைப் பொருளை எடுத்து வர  இலங்கைக் கடல் வழியைப் புலிகள் பயன்படுத்தி உள்ளனர்.

புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆசியாவில் போதைப் பொருள் வியாபாரமும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக