சனி, ஜனவரி 28, 2012

இலங்கையில் 3 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார வசதி: ஈரான் நிதியுதவி !

மேற்கு நாடுகளுக்கு ஈரானின் அணுசக்தி ஆய்வில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.ஈரான் மீதான பொருளாதர தடை அதன் பொருளாதரத்தை முடக்கும் இராணுவ நோக்கம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார வசதி அளிப்பதற்கான 1000 மின்சார திட்டங்களுக்கு ஈரான் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக ஈரான் மீதான சர்வதேச பொருளாதர தடைகள் மத்தியிலும் ஈரான் இலங்கைக்கு உதவுவது பெருமிதமானது என்றும் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார் .

ஈரான் தூதுவர் எம். என். ஹசன் பூருக்கும் அமைச்சர் சம்பிக ரணவக்கவுக்கும் இடையில் நேற்று (27) மின்சக்தி எரிசக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. அதன் போதே இதனை தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக