கொழும்பு: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பாதிக்கப்படுவதாக ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், எண்ணைய் வளத்தில் ஈரானை மட்டுமே இலங்கை சார்ந்திருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எண்ணைய் தேவையில் 93 சதவீதத்தை ஈரானே வழங்குவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலமாக அந்நாட்டை மட்டும் அமெரிக்கா மற்றும் மேற்குல நாடுகள் தண்டிக்கவில்லை. எங்களைப் போன்ற சிறிய நாடுகளும் தண்டனைக்குள்ளாகியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் உதவியை நாட உள்ளதாகவும் குறிப்பாக அமெரிக்காவின் தடைக்கு எதிராக இந்தியா பின்பற்றக் கூடிய வழிமுறைகளை பின்பற்ற உத்தேசித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக