அமெரிக்காவுக்கும், ஈரானுக்கம் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்களை அனுப்பி உளவு பார்த்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்கா இதே போல அனுப்பிய விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இப்போது ஈரான் ஆள் இல்லாத விமானத்தை விரைவில் தயாரிக்க போவதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி அகமது வாஜி கூறியிருக்கிறார். இந்த விமானத்துக்கு ஏ-1 என்று பெயரிட்டு உள்ளனர். 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. 2 மணி நேரம் தொடர்ந்து பறக்கும். 5 கிலோ குண்டை ஏந்தி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்க முடியும்.
இதன் எரி பொருளாக பெட்ரோல் மற்றும் கியாஸ் பயன்படுத்தப்படும். ரேடார் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டு இருக்கும். ஈரான் ஏற்கனவே கடற்படைக்கு பயன்படுத்தும் விமானங்களை தயாரிக்க போவதாக அறிவித்து உள்ளது.
supper supper supper...
பதிலளிநீக்கு