ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கச்சா எண்ணெயை வழங்குவதை முற்றிலும் நிறுத்தும் நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக