விஜயநகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டின் நேற்றைய நிறைவு நாள் நிகழ்ச்சியில், சுரங்க ஊழலில் சிக்கி பதவியிழந்த கர்நாடகா முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா கலந்து கொண்டார்.
ஊப்ளியிலுள்ள விஜயநகரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் இந்து சக்தி சங்கம மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றோடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் தொடக்கநாள் விழா அன்று கர்நாடகா முதல் அமைச்சர் சதானந்தகவுடா உள்ளிட்ட பாஜக
தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. இதில், சுரங்க ஊழலில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடகா முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா கலந்து கொண்டார். மாநாட்டில் பங்கேற்கும் முன்னர், ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் மோகன் பாகவத்தைச் சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
பின்னர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது,
"1925-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையுடன் ஆர்.எஸ்.எஸ் இயங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள நான் மோகன் பாகவத்தை சந்தித்து பேசினேன். அரசியல் குறித்து நான் இங்கு பேசவர வில்லை.
சட்டசபை கூட்டம் நாளை(30/01/2012) தொடங்க இருக்கிறது. 10 நாட்கள் கூட்டம் நடந்து முடிந்தவுடன் நானும், ஈசுவரப்பா, சதானந்தகவுடா, அனந்தகுமார் ஆகியோரும் ஒன்றாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறோம்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரே நோக்கம் சட்டசபை தேர்தலில் 150 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதும், விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதுமாகும். சட்டசபையில் வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டை முதல் அமைச்சர் சதானந்தகவுடாதான் தாக்கல் செய்வார். இதில் எந்த மாற்றமும் இல்லை. நான் கொண்டுவந்த பட்ஜெட் திட்டங்களை சதானந்தகவுடா சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறார். அவரும் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். எங்களுக்குள் கருத்துவேறுபாடு எதுவும் இல்லை. அனைவரும் கட்சியின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைத்து வருகிறோம்."
என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக