வெள்ளி, ஜனவரி 27, 2012

சிகிட்சை கிடைக்காமல் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனி

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநீதிதமாக குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு தொடர் சிகிட்சை அளிக்க ஏற்பாடு செய்யாமல் சிறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீனை மறுத்த உச்சநீதிமன்றம் போதுமான தொடர் சிகிட்சையை கர்நாடக மாநில
அரசு அளிக்கவேண்டும் என தீர்ப்பளித்து இருந்தது. ஆனால், உரிய சிகிட்சை கிடைக்காமல் மஃதனி சிறையில் அவதியுறுகிறார்.
கடந்த ஒன்பதாம் தேதி பெங்களூர் ஜெயநகரில் அமைந்துள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் கிளையில் பரிசோதனை மட்டுமே இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இங்கு தங்கி சிகிட்சை பெற வசதி இல்லை என்பதால் வைத்திய சாலையின் மருத்துவர் சுர்ஜித் வாரியார் ஆர்ய வைத்திய சாலையின் கோட்டக்கல் சீஃப் மருத்துவர் டாக்டர்.பி.கே.வாரியாருக்கு சிகிட்சைக்கான கேஸ் ஷீட்டை ஒப்படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பி.கி.வாரியார் சிறை அதிகாரிகளுக்கு ஃபாக்ஸ்(Fax) அனுப்பியுள்ளார். ஆனால் தொடர் நடவடிக்கை சிறை அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை. கடந்த 12-ஆம் தேதி ஃபாக்ஸ்(Fax) செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கடந்த திங்கள் கிழமை மஃதனியை சந்திக்கச் சென்ற அவரது மனைவி சூஃபியா ஜெயநகர் கிளை மருத்துவமனையில் இருந்து மருந்துகளை வாங்கிச்சென்று அளித்துள்ளார். இதுவரை அனைத்து மருந்துகளும் உறவினர்கள் மூலமாகவே மஃதனிக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
முன்பு மஃதனிக்கு சிகிட்சை அளித்த பெங்களூரில் ‘ஸவுமியா’ மருத்துவமனையில் மருத்துவர்கள், மஃதனிக்கு தொடர் சிகிட்சை வழங்குவதில் அலட்சியமாக இருக்காதீர்கள் என மூன்று தடவைக்கும் அதிகமாக சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை.
சிகிட்சைக்கு தாமதம் ஏற்படுவதால் மஃதனி தோள், கைகளில் வேதனையால் அவதியுறுகிறார். நீரழிவு நோய் அதிகரித்து அவரது வலது கண்ணின் பார்வை அதிகமாக பாதித்துள்ளது. காலில் வீக்கமும், இதர நோய்களும் அதிகரித்து மஃதனி மிகவும் அவதியுறுகிறார் என சூஃபியா கூறுகிறார்.
கர்நாடகா அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால் சிறை அதிகாரிகளால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள இயலவில்லை என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக