புதுடெல்லி:அரசு பணிகளில் ஊருடுவியுள்ள சங்க்பரிவார்கள் மீது விசுவாசமுள்ள அதிகாரிகள்தாம் இந்தியாவில் முஸ்லிம்களின் மோசமான நிலைக்கு காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அரசாங்கத்திலும், அரசு அதிகாரிகளின் கூட்டத்திலும் ஊடுருவியுள்ள சங்க்பரிவாருக்கு விசுவாசமான சிலர் முஸ்லிம்களுக்கு எதிராக
செயல்படுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கிடைக்கவேண்டிய உரிமைகளை தடுக்கின்றார்கள் என உருது பத்திரிகை ஆசிரியருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அளித்த நேர்முகத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது:
வகுப்புவாத சக்திகள் பயமுறுத்தும் அரசியல் விளையாட்டை ஆடுகின்றார்கள். முஸ்லிம்களை கொடுமைப்படுத்தவும், ஏமாற்றவும் இவர்கள் சங்க்பரிவாருக்கு விசுவாசமான அதிகாரிகளை உபயோகிக்கின்றார்கள்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிரபராதிகள் என கூறி விடுதலைச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் நிலைமையைக் குறித்து இத்தகைய அதிகாரிகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைக்கவில்லை எனவும் இந்த அதிகாரிகள் கூறுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது என ராகுல் தெரிவித்தார்.
ஆனால், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை ராகுல் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் கட்சியில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அவர் பதிலளித்தார். ஆனால், இத்தகைய சம்பவங்களில் முடிவடையும் சில உண்மைகள் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாக ராகுல் தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல்களில் தங்களின் பங்கு வெட்ட வெளிச்சமானது சங்க்பரிவார்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும், அதில் இருந்து அனைவரின் கவனத்தை திசை திருப்புவதற்காக அன்னா ஹஸாரே நடத்தும் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை பயன்படுத்துகிறார்கள் என ராகுல் கூறியதாக நேற்று முன்தினம் உருது பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
hai nanban
பதிலளிநீக்கு