திங்கள், ஜனவரி 30, 2012

BJP இரண்டாக உடைகிறது !

பராதிய ஜனதா கட்சியில் மோடிக்கும் அத்வானிக்கும் இடையே கடும் குடும்பி சண்டை நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியில் அத்வானி தன்னை பெரும் செல்வாக்கு உள்ள தலைவராக காட்டி  வந்துள்ளார்.பாபர் மசூதி விஷயத்தை பூதாகரமாக்கி அதை வைத்து  தொடர்ந்து பல ரதயாத்திரைகளை (ரெத்த யாத்திரை) நடத்தி மதவாத பிரிவினைகளை உண்டாக்கி பாரதிய ஜனதாவில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டி
கொண்டவர்தான் திருவாளர் அத்வானி. 


பாரதிய  ஜனதாவில் மிதவாத தலைவர்களாக அறியப்பட்டவர்களே பிரதம வேட்பாளராக வரமுடியும் ஏனனில் அதை வைத்துதான் நடுநிலையான ஹிந்துக்களிடம் ஓட்டுக்களை வாங்க முடியும். அந்த அடிப்படையில் வாஜ்பாய் அந்த இடத்தை பூர்த்தி செய்துவந்தார். அதனால் தொடர்ந்து அத்வானி ஓரம்கட்டப்பட்டு வந்தார் இந்நிலையில் வாஜ்பாயி சுகவீனம் அடைந்ததும் அந்த இடத்தை அத்வானி நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


அந்த சூழலில் குஜராத் இனகலவரங்களை திட்டமிட்டு நடத்தி தான் ஒரு தீவிர ஹிந்துத்துவா சிந்தனை கொண்டவர்  என்பதை நிரூபித்து பாரதிய ஜனதாவில் ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக மோடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அத்வானியின் புகழை (கலவரங்கள் மூலம்) குறுகிய காலத்தில் எட்டிப்பிடித்து மோடி அவருக்கு போட்டியாக மாறினார். இதனால் இருவருக்கும் ஒரு பனிப்போர் நடந்து வந்தது. 


அத்வானி, குஜராத்துக்கு பதிலாக பீகாரில் இருந்து, ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரையை துவக்கியதால்,  மோடிக்கும் அத்வானிக்கும் இருந்த கருத்து வேறுபாடு மேலும் பெரிதாகியது.  இந்நிலையில் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை  நடத்த பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகராக மோடி அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அந்த பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது மோடி புறக்கணித்தார்.


அத்வானியோடு மட்டும் அல்லாமல் பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கட்கர் மற்றும்  பொதுச் செயலாளர் சஞ்சய் சிங் ஜோஷி ஆகியோரோடும் மோடிக்கு பெரும் கருத்து வேறுபாடுநிலவி வந்தது. ஏனெனில் பிஜேபியின் பிரதமர் பதவிக்கு உரிய  வேட்ப்பாளராக  மோடியை  அறிவிக்க வேண்டும் என்று  கட்சியில் இருக்கும் இளஞசர்கள் விரும்பினர். ஆனால் அதை அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.


இதனால் பாரதிய ஜனதா கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்கள் வாரியாக  பல துண்டுகளாக உடைந்து போன பாரதிய ஜனதா கட்சி இப்பொழுதுமத்திய அளவில் ஒரு உடைவை நோக்கி நகர்கிறது. கேரளத்திலே மாராடு என்ற ஊரில் நடந்த கலவரத்தில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 7 ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். இதை செய்தது NDF இயக்கம்  என்று குற்றம் சாட்டியது பிஜேபி. 


இறந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் இந்த படுகொலைகளை விசாரிக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்அதை NDF  இயக்கமும் ஆதரித்து வரவேற்றதுஆனால் இந்த வழக்கை நடத்தி வந்த பிஜேபிதரப்பு திடீர் என்று இந்தவழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று வழக்கை அந்த குடும்பத்தின்  அனுமதி இல்லாமலேயே வாபஸ் வாங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த  ஒரு பிரிவினர் பிஜேபியில் இருந்து தனியாக உடைந்தனர். அதுபோல் கர்நாடகாவில் ரெட்டி சகோதர்கள், உத்ராஞ்சலில் ஒரு கோஷ்டி இப்படியாக மாநிலங்கள் வாரியாக வலுவிழந்த பிஜேபி இப்போது மத்தியிலும் ஒரு பெரும் உடைவை சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக