ஞாயிறு, ஜனவரி 29, 2012

ஜப்பான் ,இத்தாலியில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது !

Japan earthquake - 07:39 JST 28 Jan 2012 35.5N 139.0E 20 km Mஜப்பான் மற்றும் இத்தாலியில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில், ஜப்பானில் 5.5 அலகுகளாகவும், இத்தாலியில் 5.4 அலகுகளாகவும் பதிவானது. இதில் பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.
ஜப்பான், யமனாஷி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இந்திய நேரப்படி காலை 7.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில்... இத்தாலியின் ஏற்பட்ட நிலநடுக்கம் 15 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

நிலநடுக்கத்தினால் சில கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக ஸ்விட்சர்லாந்திலும் நிலநடுக்கத்தின் தன்மை உணரப்பட்டது. ஆனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக