எழுச்சிக்குப் பின்னரான எகிப்தில் கிடைத்த எதிர்பாராத வெற்றியினால் உற்சாகமடைந்துள்ள சலபி கட்சியினர், இஸ்ரேலிய-தடுப்பு கடற் பிராந்தியத்திலும் அவ்வாறானதொரு வெற்றியைக் கனியைப் பறிக்கும் ஆவல்கொண்டுள்ளனர். அபூ ஹுதைபா, காஸா சலபிக் குழுவின் அங்கத்தவர் கூறும் போது, “எமது எகிப்திய சகோதரர்களின் வெற்றி உற்சாகமூட்டுகின்றது” மேலும் அவர் கூறும் போது, “இந்த வெற்றிகள் கிலாபத்தின் மீள் உருவாக்குவதை நோக்கி பயணிக்கின்றன என்பது எமக்கு உறுதியாக்குகின்றது”.
கடந்த வருடம் வெளியேற்றப்பட்ட எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கின் பின்னர் எகிப்தில் நடைபெற்ற முதலாவது ஜனநாயக தேர்தலில் சலபிக் கட்சி 29% விழுக்காடு பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது. எகிப்திய சலபிக் குழுவின் திடீர் எழுச்சி காஸாவின் சிறுபான்மை சலபிக் கட்சியினருக்கு இவ்வாறான அடைவு பற்றிய புதிய நம்பிக்கை இரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது.
“நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போருக்குத் தயாராகுங்கள்” என அபூ அப்துல்லாஹ் அல் காஸி, காஸாவின் பிரதான சலபிக் கட்சியான ‘ஜயிஷ் அல் உம்மாஹ்’வின் தலைவர் சூளுரைத்தார். “அரபுலகின் அனைத்து மாற்றங்களும் இஸ்லாமிய கிலாபத்திற்கான திசையை நோக்கி நகருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டு, எகிப்தின் சலபிக் கட்சியான ‘அந் நூர்’ உடனான தமது உறவினை அவர் சுட்டினார். “இன்னும் 10 முதல் 12 வருடங்களில் பலஸ்தீன் விடுதலை பெறும்” என எகிப்திய சகோதர கட்சியின் வெற்றியுடன் கணித்து நம்பிக்கை தெரிவித்தார்.
“ஒற்றுமைபடுங்கள் ! பிரிவுகளை உண்டுபண்ணும் சமய ரீதியான வேறுபாடுகளை விட்டு ஒன்றுபடுங்கள் !” என அழைப்பு விடுக்கின்றனர் பலஸ்தீனின் காஸா சலபிக் கட்சியினர்.
காஸாவில் ஐந்து பிரதான சலபி கட்சிகளான ‘ஜயிஷ் இஸ்லாம்’, ‘தவ்ஹீத் வல் ஜிஹாத்’, ‘ஜயிஷ் அல் உம்மாஹ்’, ‘அன்சார் அல் ஸுன்னா’ மற்றும் ‘ஜுன்த் அன்சாரி அல்லாஹ்’ ஆகியன செயல்படுகின்றன.
எகிப்திய மற்றும் காஸா ஆகிய சலபிக் கட்சிகள் உட்பட அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் கிலாபத் பற்றிய இனிய கனவுடன் முஸ்லிம் உம்மத்தை நம்பிக்கையுடன் முகம் நோக்கும் போது, அதனை ஒரு பயங்கர கனவாகச் சித்தரிக்கும் மேற்கின் ஊடகப் பிரச்சாரமும் குறைவில்லாமல் நடைபெறுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக